More servicesWindows Live
HomeHotmailSpacesOneCare
 
MSN
Sign in
 
 
Spaces home  திருதிருPhotosProfileFriendsMore Tools Explore the Spaces community

திருதிரு

தென்னன் தமிழாலே மேலோர் சொல் வார்த்தை தெளிவோமே
Updated 4/3/2008
Updated 4/3/2008
Updated 2/17/2008
Updated 10/27/2007
Updated 10/19/2007
Updated 8/3/2007
Updated 5/29/2007
Updated 4/30/2007
Thanks for visiting!
  • December 06 5:37 PM
    நன்றி திரு சேந்தன் ! மதுரை மண்ணின் மைந்தர்  தமிழ் சுவைப்பதில் மிக்க மகிழ்ச்சி!
  • December 04 2:32 AM
    வாழ்க வளமுடன்   !

Public folders

Folders shared with the world
April 25

திருப்புல்லாணி பெருமாள் திருமஞ்சனம்

 திருப்புல்லாணி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த பெருமாள் திருமஞ்சனத்தின் இரண்டாவது பகுதி இது. ஏற்கனவே முதல் பகுதி  இந்த வலையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இது வருகிறது.


Thiruppullani thirumanjanam Pt2

  
Video: Thiruppullani thirumanjanam Pt2

April 24

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவம் பகுதி 2

 

அகுதி 1ன் தொடர்ச்சி இது. பெருமாள் கோவிலிலிருந்து மண்டகப்படிக்கு எழுந்தருளும் காட்சி.

Perumal from kovil to Ashramam

  
Video: Perumal from kovil to Ashramam
April 23

திருப்புல்லாணி திருமஞ்சனம்

  திருப்புல்லாணி பங்குனி உத்சவம் 4ம் திருநாள் ஆண்டவன் ஆச்ரமத்தில் பெருமாளுக்கு நடந்த விசேஷ அலங்கார திருமஞ்சனத்தின் முதல் பகுதி இது.

Thiruppullani uthsavam Pt3

  
Video: Thiruppullani uthsavam Pt3
April 21

Talking about Thiruppullani uthsavam Pt1

 பங்குனியில் திருப்புல்லாணியில் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாளுக்கு 11 நாள் ப்ரும்மோத்ஸவம். அதில் 4ம் நாள் ரெட்டை கருட சேவை உத்ஸவம். தற்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படியாக நடந்து வருகிறது. இத்தனை வருடங்களாக கோவிலிலேயே நடந்து வந்த மண்டகப்படி இப்போது ஆண்டவன் ஆச்ரமம் புதிதாகக் கட்டப்பட்டதை அடுத்து புதிய கட்டிடத்தில் பெருமாள் காலையில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளி இரவில் கருட வாகனப் புறப்பாடு நடைபெற்றது. அதில் முதல் பகுதி வீடியோ இது. பகுதி பகுதியாக தொடரும்.


Thiruppullani uthsavam Pt1

  
Video: Thiruppullani uthsavam Pt1

February 17

திருவரங்கத்தந்தாதி

 

thiruvarangatitle

தாரணிதானவன்பாலிரந்தான்சங்கம்வாய்வைத்தொன்னார்
தாரணிதானவஞ்செய்தானரங்கன்றமர்கள்பொருந்
தாரணிதானவமராவதியுந்தருநிழலும்
தாரணிதானவயிராவதமுந்தருகினுமே
.

(இ -ள்) தானவன்பால் -- அசுரனான மகாபலியினிடத்து,  தாரணி இரந்தான் -- (மூன்று அடி) நிலத்தை யாசித்தவனும்,, சங்கம் வாய் வைத்து -- (தான் தனது) திவ்விய சங்கத்தை வாய்வைத்து ஊதிய மாத்திரத்திலே, ஒன்னார் தார் அணி தவம் செய்தான் -- பகைவர்களுடைய, படைவகுப்பினொழுங்கைப் பழுதுபடுத்தியவனும் ஆன, அரங்கன் - ரங்கநாதனுடைய, தமர்கள் -- அடியார்கள், --- அணிது ஆன அமரா வதியும் -- அழகியதாகிய சுவர்க்கலோகத்தையும், தருநிழலும் - (அங்குள்ள) கற்பக விருக்ஷங்களின் நிழலையும் , தார் அணி தானம் அயிராவதமும் -- கிண்கிணிமாலையை அணிந்ததும், மதங்கொண்டது மான ஐராவதமென்னுந் தெய்வயானையையும், தருகிலும் - (வலியக்) கொடுத்தாலும், பொருந்தார் -- -- (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன்படார்; (எ-று)

    திருமாலடியார்கள் மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்கு வரேயன்றிச் சிலகாலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்கலோகத்து இந்திர பதவியைக் கொடுத்தால் அதனையும் சிறிதும் பொருள் செய்யார் என்பதாம் ; “ ஆனாத செல்வத்தரம்பையர்கடற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் “ என்று குலசேகராழ்வார் அருளிச் செய்தமை காண்க ; பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மகரிஷியைச் சத்தியலோகத்துக்கு அழைத்தபோது, மகா விஷ்ணுபக்தரான அம்முனிவர் அம்மேலுலகையுமுட்பட இகழ்ந்து “அற்பங்கருதேன்“என்றும்,“மறுகா நெறி யெய்துவேன்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

     தாநவன் -- ( காசியபமுனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினரென்று பொருள்படும் வட மொழித் தத்திதாந்தநாமம். ஒன்னார் -- ஒன்றார் என்பதன் மருஉ. அவம்செய்தான் -- பயனிலதாக்கிய வன். தம் --தம்மவர்;  கிளைப்பெயர்; அணிது -- அண்ணிது ; அதாவது சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம். எல்லாவுலகங்களிலும் மேலுள்ளதான  முத்தியுலகத்தின் சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான அமராவதி மிக அருக்லுள்ளதாதல் காண்க, சேணுலகமாகிய முத்தியைப் பெறவல்ல பாகவதர்க்குச் சுவர்க்கலோகம் அரியதொன்றன் றாதலால், எளிது என்னும் பொருளில் ‘ அணிது' என்ற தாகவும் கொள்ளலாம். சங்கம், அமராவதி, தரு, தாகம், ஐராவதம் -- வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் தேவர்களையுடையதென்று காரணப்பொருள்படும்.    சுவர்க்கலோகத்தில் பஞ்சதேவ  தருக்களின்   நிழல் இந்திரன் அரசுவீற்றிருக்குமிடமாதலை,  ”இன்றளிர்க் கற்பகநறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை” என்றதனாலும் அறிக. அயிராவதம் -- முதற்போலி. இது, இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது. தருகின், கு - சாரியை. உம்மை -- உயர்வுசிறப்பு.

   கண்ணன் சத்தியபாமைக்காகப் பாரிசாதத்தருவைத் தேவலோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக்குக் கொணர்கையில் வந்து எதிர்த்துப் போர்செய்த சகலதேவ சைநியங்களையும் தனது சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமையும், மகாபாரதயுத்தத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற் பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும் மற்றும் பலபோர்களில் இங்ஙனஞ் செய்தமையும்பற்றி, ‘சங்கம்வாய்வைத் தொனார்தாரணி தானவஞ்செய்தான்' என்றார். “அருட் கொண்டலன்னவரங்கர் சங்கோசை யிலண்ட மெல்லாம், வெருட்கொண்டிடர்பட மோகித்து வீழ்ந்தன வேகமுடன், தருக்கொண்டு போகப்பொறாதே தொடருஞ் சதமகனும், செருக்கொண்ட முப்பத்துமுக்கோடி தேவருஞ் சேனையுமே' “தருணவாள் நிருபர் மயங்கிவீழ்தர வெண்சங்கமுமுழக்கி” என்பன காண்க.

View more entries